ஆப்பிள்- ல ஐஸிங் கேக்...சாப்பிட்ட செம்மையா இருக்கும்... ட்ரை பண்ணி பாருங்க...! - Seithipunal
Seithipunal


ஆப்பிள் ஐஸிங் கேக்
தேவையான பொருட்கள் :
பொருள்                     - அளவு
ஆப்பிள்                        1 கிலோ
மைதா                              1 கிலோ
வெண்ணெய்                 600 கிராம் 
ஐஸிங் சர்க்கரை            500 கிராம்
மில்க் மெய்ட்                    100 கிராம் 
பால்                                        150 மிலி 
சர்க்கரை                            250 கிராம்
பட்டைத்தூள்                      10கிராம் 
பிரெட் தூள்                        250 கிராம் 


செய்முறை :
முதலில் ஆப்பிள் ஐசிங் கேக் செய்வதற்கு வெண்ணெய், சர்க்கரை, மில்க்மெய்ட், பால், மைதாமாவு ஆகிய அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.பிறகு ஆப்பிள் தோலை நீக்கிப் பொடிப்பொடியாக நறுக்கி, அதனுடன் சர்க்கரை, பட்டைத்தூள், வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.பிறகு வேக வைத்த ஆப்பிளுடன் பிரெட் தூளைச் சேர்த்துப் பிசைந்துக் கொள்ளவும். பிறகு அந்தக் கலவையை தடிமனாகும் வரை உருட்டி, வட்டமான ஒரு மோல்டில் வெண்ணெய் தடவி உருட்டிய மாவை வைத்து, அதன் மேல் ஆப்பிள் கலவையை வைக்கவும். இதன் மேல் மில்க் மெய்டை பரவலாக சேர்த்து, மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரி சென்டிகிரேடில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

apple icing cake


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->