சத்தான, சுவையான கோதுமை- பீட்ரூட் தோசை.! செய்வது எப்படி.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

ஆட்டிய உளுத்தம் பருப்பு மாவு - கால் கப்,
கோதுமை மாவு - 1 கப்,
துருவிய பீட்ரூட் - கால் கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய் - 3,
வெங்காயம் - 1
எண்ணெய் - தாளிக்க மற்றும் தோசை சுட.

செய்முறை :

ஆட்டிய உளுத்தம் பருப்பு மாவு, உப்பு, கோதுமை மாவு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலந்து, பின்னர் ஒரு 8 மணி நேரம் புளிக்குமாறு விடவும்.  

அதன் பின்னர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நன்றாகப் பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பீட்ரூட் ஆகியவை சேர்த்து நன்றாக  வதக்கவும்.

அதன் பின்னர் வதக்கிய கலவையை எடுத்து மாவில் கொட்டி நன்றாக கலக்கிக் எடுத்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து எப்பொழுதும் போல தோசைகளாக வார்த்து எடுத்தால் சத்தான சுவையான கோதுமை  பீட்ரூட் தோசை தயார்.! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wheat and beetroot dosai preparation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->