வாழ்நாளை அதிகரிக்கும் வாழைப்பூ பொரியல்..! இன்றே செய்து பாருங்கள்..!
vaazhaipoo poriyal recipe tamil
வாழைப்பூவில் பல நன்மைகள் உண்டு, அதனால் அதை தினமும் அல்லது வாரத்தில் 2 முறை சாப்பிட வேண்டும். பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும் நல்லது. வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வாழைப்பூ – 2,
மோர் - 2 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 50 கிராம்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
உப்பு - தேவையான அளவு.

செய்யும் முறை:
வாழைப்பூவில் நடுவில் உள்ள நரம்பு நீக்கி, சுத்தம் செய்து மோர் கலந்த தண்ணீரில் ஊற கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் எடுத்துவைத்து கொள்ளவும்.
பச்சை மிளகாயை வட்ட வடிவமாக சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாழைப்பூவை நறுக்கி வேக வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். அதன்பின் வாழைப்பூ, தேங்காய்த்துறுவல் வேக வைத்த பருப்பு, உப்புத்தூள் போட்டு கிளறி, இறக்கி பரிமாறவும்.
English Summary
vaazhaipoo poriyal recipe tamil