சளி பிரச்சனையை கட்டுப்படுத்து திப்பியில் இந்த மாதிரி செஞ்சி கொடுங்க..!
Thippili Rasam Recipe
திப்பிலியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும். திப்பிலியில் ரசம் செய்து சாப்பிடலாம்.
தேவையானவை:
அரிசி திப்பிலி - 10,
கண்டதிப்பிலி - சிறிதளவு,
மிளகு - 10,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளுங்கள். அதன் பின்னர் அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து எடுத்து கொள்ளுங்கள். அதனை மிக்சியில் ஈட்டு அரைத்து கொள்ளுங்கள்.
அரைத்த விழுதை புளி கரைசலில் அதனை சேர்த்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கடுகு, கருவேப்பில்லை, போட்டு தாளித்து புளிகரைசலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான திப்பில் ரசம் தயார்.