அலாஸ்காவின் கடல் சுவை உலகை கவர்கிறது! -மென்மையும் நறுமணமும் கலந்த ‘ஹாலிபட்’ மீன் ரெசிபி!
taste Alaskas sea captivating world tender and aromatic halibut fish recipe
அலாஸ்கன் ஹாலிபட் (Alaskan Halibut) – மிருதுவான மீன் விருந்து
அலாஸ்காவின் குளிர்ந்த கடல்களில் இருந்து கிடைக்கும் ஹாலிபட் மீன் அதன் மென்மையும், நறுமண சுவையாலும் உலகம் முழுவதும் பிரபலமானது. இது புரதச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின்களால் நிறைந்த ஆரோக்கியமான உணவு.
தேவையான பொருட்கள்:
ஹாலிபட் மீன் துண்டுகள் – 2 (150–200 கிராம் அளவு)
ஆலிவ் ஆயில் – 2 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பட்டர் – 1 மேசைக்கரண்டி
புதினா இலைகள் அல்லது கொத்தமல்லி – அலங்கரிக்க

செய்முறை:
மசாலா தயார் செய்வது:
ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, பூண்டு விழுது, மிளகு தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
மீனை ஊறவைத்தல்:
ஹாலிபட் மீன் துண்டுகளை இந்த கலவையில் 15–20 நிமிடங்கள் ஊறவைக்கவும். இது மீனுக்கு சுவை ஊற உதவும்.
பான் ஃப்ரை செய்ய:
ஒரு பான் சூடாக வைத்துக் கொண்டு அதில் பட்டர் சேர்க்கவும்.
பட்டர் உருகியதும் ஊறவைத்த மீன் துண்டுகளை போட்டு இரு பக்கமும் தங்க நிறமாக வேகவிடவும் (ஒரு பக்கம் சுமார் 3–4 நிமிடங்கள்).
சேவிப்பது:
வேகவைத்த பிறகு மீனின் மேல் சிறிது எலுமிச்சை சாறு தூவி, புதினா இலைகள் அல்லது கொத்தமல்லியால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
English Summary
taste Alaskas sea captivating world tender and aromatic halibut fish recipe