தலை முடி பிளவு ஏற்படுகிறதா?.! உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்..! - Seithipunal
Seithipunal


அனைவருக்கும் முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவோம். சிலருக்கு நுனி முடியில் பிளவு ஏற்படும். இதனால் முடி வளர்ச்சி பாதிப்படையும்.

தலை முடியை எப்படி பராமரிக்கலாம் என பார்போம் :

உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பு கொண்டு சீவுவது தவிர்த்து விடுங்கள். இந்த நேரத்தில் சீவுவதால் முடி உதிர்வு, முடி பிளவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

உங்கள் தலை முடியை துவட்ட பருத்தி துண்டை பயன்படுத்துங்கள். மிகவும் கடினமாக இருக்கும் துண்டு முடியை சேதப்படுத்தும் என்பதால் பருத்தி துணியை பயன்படுத்துமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நுனி முடி பிளவு வரமால் தடுக்க உதவும் ஹேர் மாஸ்குகள் :

தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்கள் கூந்தலின் வேர்ப் பகுதியிலிருந்து நுனி வரை நன்றாகத் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு உங்கள் கூந்தலை ஒரு துண்டை கொண்டோ அல்லது பிளாஸ்டிக் கவர் கொண்டோ தூக்கி கட்டி நன்றாக மூடிக் கொள்ள வேண்டும். ஒரு 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்னர் ஷாம்பூ கொண்டு வாஷ் செய்யவும்.

முட்டையின் வெள்ளை கருவுடன்  2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து தலை முடியில் தடவி ஒரு மணி நேரம் தடவி பின்னர் ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்கவும். இதனை மாதமிருமுறை செய்து வந்தால் முடி பிளவுகள் சரியாகும்.

தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது பாதம் ஆயில் ஒன்றாக கலந்து மஜாஜ் செய்ய வேண்டும். தலையில் ஊறவைத்து குளித்து வர வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Some Easy Tips Hair Splits


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->