பொங்கல் ஸ்பெஷல் : தித்திப்பான சர்க்கரை பொங்கல்...எப்படி செய்யலாம்? - Seithipunal
Seithipunal


தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் சிறப்பு என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை சுவையாக எப்படி செய்வது? என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

பச்சரிசி - 1 கிலோ 

பாசிப்பருப்பு - 100 கிராம் 

பால் - அரை லிட்டர் 

முந்திரி - 15 

உலர் திராட்சை - 15 

வெல்லம் - 800 கிராம் (பொடித்தது)

நெய் - 200 கிராம் 

பச்சை கற்பூரம் - 1 சிறிய கட்டி (பொடித்தது)

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - கால் கப்

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

சர்க்கரை பொங்கல் செய்வதற்கு முதலில் பச்சரிசியை நீரில் ஊற வைத்து நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு மண்பானையை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு கிளறவும்.

அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

பின்பு, அரிசி மற்றும் பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் நெய் ஆகியவற்றை கலந்து, பின்பு பொடித்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளறவும்.

வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல் மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு கிளறி இறக்கினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்!!!.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarkkai pongal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->