பதிலடி...! இஸ்ரேல் தாக்குதலில் ஏமன் சிதறியது...! 35 பேர் பலி...!
Retaliation Yemen shattered by Israeli attack 35 killed
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான இரத்தப் பாய்ச்சல் ஏறக்குறைய 2 ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த நீண்டகால போரில், காசா பகுதியில் மட்டும் 62,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு, ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பக்கபலமாக இருப்பது நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.இந்நிலையில்,அரபிக்கடல் மற்றும் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்கு கப்பல்களை, இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து குறிவைத்து தாக்குகின்றனர்.
இதில் கூடுதலாக, இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களும் நடத்தி வருகின்றனர்.இதற்கு பதிலடி கொடுக்க, இஸ்ரேல் ராணுவம் ஏமனில் வான்வழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளது. அண்மையில்,நடந்த தாக்குதலில், ஏமன் தலைநகர் சனா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் குண்டுவீச்சால் அதிர்ந்தன.
இதில் 35 பேர் உயிரிழந்ததோடு, 130 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் என ஹவுதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதோடு, தாக்குதலில் ஏமன் ராணுவ தலைமையக கட்டிடமும் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Retaliation Yemen shattered by Israeli attack 35 killed