சுவையான வெள்ளை அப்பம் - வாங்க பார்க்கலாம்.!
recipe of white appam
சுவையான வெள்ளை அப்பம் - வாங்க பார்க்கலாம்.!
செட்டிநாடு உணவுகளில் ஸ்பெஷல் இந்த வெள்ளை அப்பம். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. அதன் இந்தப் பதிவின் மூலம் தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்:-
பச்சரிசி, உளுந்து, தேங்காய், உப்பு, பேக்கிங் சோடா, எண்ணெய்

செய்முறை:-
தேவையான அளவு பச்சரிசி மற்றும் உளுந்தையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு,சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் அரைத்த மாவை மெதுவாக விட்டு அப்பமாக ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து அப்பம் மேலே வரும் போது திருப்பி விட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்து கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான அப்பம் தயார்.