மணத்தக்காளி கீரையை இப்படியும் செய்து சாப்பிடலாமா? வாங்க பார்க்கலாம்.!
recipe of manathakkali keerai dosa
மணத்தக்காளி கீரையை இப்படியும் செய்து சாப்பிடலாமா? வாங்க பார்க்கலாம்.!
பொதுவாக வயிறு மற்றும் வாயில் ஏற்படும் புண்களை போக்குவதற்கு அருமருந்தாக பயன்படுவது மணத்தக்காளி கீரை. அதுமட்டுமல்லாமல், பெண்களின் கருப்பையை வலுப்படுத்தவும், ஆண்களின் உயிர் அணுக்களின் தரத்தை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் இந்தக் கீரை பயன்படுகிறது.
அதனால், பெண்கள் இந்தக் கீரையை சாம்பார் அல்லது சூப் வைத்து சாப்பிடுகின்றனர். சிலருக்கு இந்தக் கீரையை சாப்பிட கஷ்டமாக இருப்பதால் மணத்தக்காளி கீரையை வேறொரு புதிய முறையில் சமைத்து சாப்பிடுவது குறித்து இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்:-
தோசை மாவு -2 கப், மணத்தக்காளி கீரை - 1கப், சின்ன வெங்காயம் 8-10, பூண்டு -5, இஞ்சி - சிறிய துண்டு, சீரகம் - ½ டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2-3, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தோசை செய்முறை :-
முதலில் கீரையை சுத்தம் செய்து இலைகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதேபோல், இஞ்சி, சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பை பற்றவைத்து கடாயை வைக்க வேண்டும். அது சூடானவுடன் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து பொரிய விடவும். இதனுடன் மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கிய பிறகு அதனுடன் மணத்தக்காளி கீரை மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கிய பின்னர் கீரைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைக்க வேண்டும்.
இந்தக் கலவையை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து அதனை தோசை மாவுடன் கலந்து தோசை ஊற்றி சாப்பிடலாம். இந்த தோசையை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
English Summary
recipe of manathakkali keerai dosa