சத்தான முடக்கத்தான் கீரை இட்லி.! செய்வது எப்படி..!
mudakathan keerai idly preparation
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 6 கப்
முழு உளுந்து - 1 கப்
வெந்தயம் - 1 /2 கப்
முடக்கத்தான் கீரை - 3 கப் (ஆய்ந்தது)
வாழை இலை - 2
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
முடக்கத்தான் கீரை இட்லி செய்வதற்கு முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்றையும் தனித்தனியே எடுத்து, அவற்றை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்கு ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு அரைக்கவும். பிறகு முடக்கத்தான் கீரையை சேர்க்கவும்.
பிறகு உளுந்து, அரிசி இரண்டையும் சேர்த்து அரைத்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைத்து புளிக்க விடவும்.
பிறகு இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை கொஞ்சம் தடிமனாக ஊற்றவும்.
இட்லி தட்டை மூடிவைத்து ஆவியில் வேக விடவும். சத்தான முடக்கத்தான்கீரை இட்லி தயார்.
English Summary
mudakathan keerai idly preparation