வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகிப்போர் கூடுதல் பணம் கேட்டால், உடனே இதை செய்யுங்கள்.!
indane gas complaint number
வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் நபர்கள் கூடுதலாக பணம் கேட்டால், புகார் அளிக்கலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடுகள்தோறும் கியாஸ் சிலிண்டர் விநியோகிக்க வரும் நபர்கள் 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிப்பது வழக்கம். இந்தத் தொகையை வழங்க மறுக்கும் வாடிக்கையாளர்களிடம் சில சமயத்தில் தகாறும் செய்வதும் உண்டு.

இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டள்ள அறிக்கையில், கியாஸ் சிலிண்டருக்காக கொடுக்கப்படும் ரசீதில் உள்ள விலைக்கு மேல் பணம் கேட்டால் இண்டேன் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கியாஸ் சிலிண்டர் விபத்து, கியாஸ் கசிவு போன்ற மிக அவசர உதவிக்கு 1906 என்ற எண்ணையும், மற்ற புகார்களுக்கு 18002333555 என்ற இலவச எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது.
English Summary
indane gas complaint number