சுவையான தக்காளி ஊறுகாய்.! செய்வது எப்படி.!
how to prepare thakkali ooruka
தேவையான பொருட்கள்:
புளி தண்ணீர் - அரை கப்
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
தக்காளி - 4
மிளகாய் தூள் - 5 டீஸ்பூன்,
கள் உப்பு - 3 டீஸ்பூன்,
வெந்தையத் தூள் - 1 டீஸ்பூன்,
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5
எண்ணெய் - 3/4 டீஸ்பூன்,
பூண்டு - 10.

செய்முறை :
தக்காளியை நன்கு பொடி, பொடியாக நறுக்கி எடுத்து மிக்சியில் நைசாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின்னர், மைய அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
இதனுடன் புளித் தண்ணீரை சேர்த்து இத்துடன் மிளகாய்த் தூள், வெந்தையத் தூள், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் தாளிக்க வைத்துள்ள பொருட்களை எடுத்து போட்டு தாளித்து, ஊறுகாயில் கொட்டவும்.
சுவையான, தக்காளி ஊறுகாய் ரெடி.!
Tamil online news Today News in Tamil
English Summary
how to prepare thakkali ooruka