நோய்களை விரட்டி அடிக்கும், பீட்ரூட் பருப்பு ரசம்.! செய்வது எப்படி.!
How to prepare beetroot rasam
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
புளி - நெல்லி அளவு,
தக்காளி - 2,
தனியா - 2 டீஸ்பூன்,
மிளகு - 1 தேக்கரண்டி,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் வத்தல் - 4,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பீட்ரூட் சாறு - 2 கப்,
பெருங்காயம் - 2 சிட்டிகை,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்
நன்கு துவரம் பருப்பை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதன் பின்னர் பருப்புடன், தக்காளியை சேர்த்து மசித்து எடுத்துக்கொள்ளவும்.
புளியை கரைத்த தனியாக கரைசலை வடிகட்டிக்கொள்ளவும். கடாயில் மிளகு, தனியா, 1/2 தேக்கரண்டி சீரகம், வத்தலை போட்டு வாசனை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் தூள் செய்த பொடி சேர்க்கவும்.
பின்னர் வேக வைத்துள்ள பருப்பு, தக்காளி கலவையை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் புளிக்கரைசல், பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு நுரைகூடியதும் இறக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும். சத்தான சுவையான பீட்ரூட் பருப்பு ரசம் தயார்.!
English Summary
How to prepare beetroot rasam