சாதம் மீந்து இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க.!
how to make waste rice vadai
சாதம் மீந்து இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க.!
நம் வீட்டில் தினமும் மீந்த சாதத்தை தொட்டியில் கொட்டுவோம். அப்படி அந்த சாதத்தை வீணடிக்காமல் நல்ல மொறு மொறுப்பான வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை, மீந்த சாதம், பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட், வறுத்த வேர்க்கடலை, உப்பு, எண்ணெய்

செய்முறை:-
முதலில் பொட்டுக்கடலையை பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். இதேபோல், சாதத்தையும் மிக்ஸியில் தண்ணீரில்லாமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை, அரைத்த பழைய சாதம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய கேரட், வறுத்த கடலை, உப்பு தேவையான அளவு சேர்த்து அனைத்தையும் நன்றாக வடை பதத்துக்கு பிசைந்துகொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் வடை சுடும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி அதனை சூடானதும், அதில் சிறு சிறு வடைகளாக தட்டி சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும். மீந்த சாதத்தை வீணடிக்காமல் சுவையான வடை செய்து சாப்பிடலாம்.
English Summary
how to make waste rice vadai