மருத்துவ குணமுள்ள வெற்றிலை துவையல்.!!
how to make vetrilai thuvaiyal
தேவையான பொருட்கள்:-
வெற்றிலை, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய், கடலைப்பருப்பு, வரமிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், துருவிய தேங்காய்.
செய்முறை:-
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணையை ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் சேர்த்து வறுத்து அதனை தனி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அந்த கடாயில் தேங்காயை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து வெற்றிலை கிள்ளி போட்டு அரைத்து எடுத்தால் வெற்றிலை துவையல் தயார்.
English Summary
how to make vetrilai thuvaiyal