கரூர்: விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய வழக்கு - நாள் குறித்த உச்சநீதிமன்றம்!
Karur Stampede TN Govt CBI SC Case
கரூர்: விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில், “உயர் நீதிமன்றத்தில் இருந்த இரு நீதிபதிகளில் ஒருவரே தற்போதைய விசாரணை திருப்திகரமாக இல்லை என்று கூறியிருந்தார். இருந்தும் சிபிஐ விசாரணை மறுக்கப்பட்டது” என்று வாதிடப்பட்டது.
இதனை அடுத்து வழக்கு அக்டோபர் 10-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது. இதையடுத்து, கூட்ட நெரிசலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் பலர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
விசாரணையில், எந்தக் கட்சியும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த அனுமதி பெறக்கூடாது என்றும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் குடிநீர், ஆம்புலன்ஸ், மருத்துவம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கட்டாயம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
Karur Stampede TN Govt CBI SC Case