வாழைப்பூவில் சட்னியா? - வாங்க பார்க்கலாம்.!
how to make vazhai poo satni
பொதுவாக இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று தான் சாப்பிட்டிருப்போம். ஆனால், முதல் முறையாக வாழைப்பூவை வைத்து சட்னி செய்வதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
வாழைப்பூ
கடலை பருப்பு
உளுந்தம்பருப்பு
தேங்காய்
சின்ன வெங்காயம்
பூண்டு
மல்லிவிதை
சீரகம்
புளி
உப்பு
வரமிளகாய்
எண்ணெய்
கறிவேப்பிலை

செய்முறை:-
முதலில் வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். இதையடுத்து ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடானதும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், மல்லி விதை மற்றும் சீரகத்தை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
இதனை ஆற வைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் நறுக்கி வைத்த வாழைப்பூ, சின்ன வெங்காயம் நன்றாக வதக்கி அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் புளி சேர்த்து வதக்க வேண்டும்.
இதையடுத்து ஒரு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான வாழைப்பூ சட்னி தயார்.
English Summary
how to make vazhai poo satni