காலை உணவை பத்து நிமிடத்தில் செய்ய வேண்டுமா? இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க.!!
how to make thavalai adai
காலை உணவை பத்து நிமிடத்தில் செய்ய வேண்டுமா? இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க.!!
தினமும் காலை மற்றும் இரவில் இட்லி, தோசை, சப்பாத்தி என்று சாப்பிட்டு சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி இருக்கும் நண்பர்களுக்கு இதோ இந்த பதிவு ஒரு புது விதமான, சுவையான, ஈஸியான ஒரு தவலை அடை ரெசிபியை தான் பார்க்க போகிறோம்.
இந்தத் தவலை அடை செய்வதற்கு தேவையான பொருட்கள்:-
பச்சை அரிசி
மிளகு
சீரகம்
தேங்காய் துருவல்
கடுகு
காய்ந்த மிளகாய்
உளுத்தம் பருப்பு
பெருங்காயத் தூள்
எண்ணெய்
உப்பு

செய்முறை:-
முதலில் ஒரு மிக்ஸி சாரில் பச்சரிசி, சீரகம், மிளகு, ரவை பதத்திற்கு பொடியாக இடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் தேங்காய் துருவளை சேர்த்து வதக்கி உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதி வந்தவுடன் எடுத்து வைத்துள்ள பச்சரிசி பொடியை போட்டு கெட்டியாக வரும் வரை கிளற வேண்டும். அதனை ஆற வைத்து கொஞ்ச கொஞ்சமாக எடுத்து தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் வெந்தவுடன் எடுத்தால் சுவையான தவலை அடை தயார்.
English Summary
how to make thavalai adai