மிகவும் ருசியான வெண்டைக்காய் கிரேவி.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


மிகவும் ருசியான அனைவருக்கும் பிடித்த வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க, 

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 1/4 கிலோ 

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 4

இஞ்சி,பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்

தக்காளி - 2

மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

கடுகு, சீரகம் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

முதலில் வெண்டைக்காயை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காயை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இஞ்சி-பூண்டு பேஸ்ட், தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும். இதையடுத்து மிளகாய் பொடி, மல்லிப் பொடி, கரம் மசலா, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு வெண்டைக்காய், தயிர் சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் மூடிவைத்து வேகவைக்க வேண்டும்.பிறகு கொத்தமல்லித் தழையைச் சேர்த்து இறக்கினால் சுவையான வெண்டைக்காய் கிரேவி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make tasty Vendakkai gravy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->