வீட்டில் சேனைக்கிழங்கு இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க.!!
how to make senai kizhangu varuval
வீட்டில் சேனைக்கிழங்கு இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க.!!
பொதுவாக நாம் உருளைக்கிழங்கு வறுவல், பாகற்காய் வறுவல், வாழைக்காய் வறுவல் என்று தான் கேள்விப்பட்டிருப்போம். தற்போது புதிதாக சேனைக்கிழங்கு வறுவல் குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு, உப்பு, எண்ணெய், மஞ்சள் தூள், புளி, மிளகு, சீரகம், சோம்பு, மிளகாய்த் தூள், பூண்டு

செய்முறை:
முதலில் சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு அதனுடன் புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிழங்கை வேகவைத்து இறக்குங்கள். அதன் பிறகு நீரை வடித்துவிட்டுக் கிழங்கை தனியே எடுத்து வையுங்கள்.
இதையடுத்து மிக்சி ஜாரில் மிளகு, சீரகம், சோம்பு, மிளகாய் தூள் உள்ளிட்டவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து, அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்குங்கள். இந்த விழுதை கிழங்குத் துண்டுகள் ஒவ்வொன்றின் மீதும் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து, தோசைக் கல்லைச் சூடாக்கி, அதன்மீது கிழங்குகளைப் பரவலாக அடுக்கி, எண்ணெய் விட்டு, கிழங்குகளை இரு புறமும் திருப்பி விட்டு மொறுமொறுப்பாக வேகவைத்து எடுத்தால் சுவையான சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
English Summary
how to make senai kizhangu varuval