அது என்ன "செலவு ரசம்" - வாங்க எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.! - Seithipunal
Seithipunal


அது என்ன "செலவு ரசம்" - வாங்க எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.!

இதுவரைக்கும் மிளகு ரசம், வெங்காய ரசம், வெந்தய ரசம், பருப்பு ரசம், தக்காளி ரசம் என்று தான் செய்வார்கள். ஆனால், முதல்முறையாக செலவு ரசம் செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருள் :-

சின்ன வெங்காயம் 
எண்ணெய்
கடுகு
சீரகம்
மிளகு
தனியா
வர மிளகாய்
பூண்டு
தக்காளி
மல்லி இலை
மஞ்சள் தூள்

செய்முறை :- 

முதலில், பூண்டு, வர மிளகாய், சின்னவெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம், தனியா, மஞ்சள் தூள், மல்லி இலை உள்ளிட்டவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அந்த விழுதை மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வர மிளகாய், வெங்காயம் போட்டு தாளித்து அதனை கலந்து வைத்துள்ள ரசத்தில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் சூடான செலவு ரசம் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make selavu rasam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->