சர்க்கரை நோயாளிகள் சாப்பிட அற்புதமான காலை உணவு இதோ.!
How to make ragi bulka
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட அற்புதமான காலை உணவு இதோ.!
நாட்டில் ஏராளமானோர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக பல வைத்திய முறைகளைத் தேடிகொண்டே இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க சர்க்கரை நோயாளிகள் எந்த விதமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று குழப்பத்திலேயே உள்ளனர்.
அப்படி உள்ளவர்கள் ராகி மாவில் செய்யப்பட்ட உணவுகளை தினமும் சாப்பிடுவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இந்த ராகி மாவை அடை, தோசை, இட்லி என்று தான் வழக்கமாக செய்து சாப்பிடுவார்கள். இது சிலருக்கு பிடிக்காமல் இருப்பதால் ராகி மாவில் புதுவிதமாக புல்கா செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்
ராகி மாவு
கோதுமை மாவு
தண்ணீர்
உப்பு
செய்முறை :-
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். இந்த கிண்ணத்தை அடுப்பில் வைத்து லேசான தீயில் கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கலந்து வேக வைக்க வேண்டும்.
இதையடுத்து ராகி மாவு கெட்டியானதும் சிறு சிறு உருண்டைகளாக வெட்டி சப்பாத்தி போல் கையால் அழுத்தி சுட்டால், இதோ எளிதான காலை உணவு தயார். இந்த ராகி புல்காவை சிக்கன் மற்றும் மட்டன் கறியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.