இட்லிக்கு ஒரே சட்னி சாப்பிட்டு போர் அடிக்குதா? வாங்க புதுசா ஒரு சட்னி ட்ரை பண்ணுவோம்.!!
how to make potato chutny
இட்லிக்கு ஒரே சட்னி சாப்பிட்டு போர் அடிக்குதா? வாங்க புதுசா ஒரு சட்னி ட்ரை பண்ணுவோம்.!!
இட்லி, தோசைக்கு பொட்டுக்கடலை தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, காரச் சட்னி, மல்லிச் சட்னி, புதினா சட்னி, கடலைப்பருப்பு சட்னி, நிலக்கடலை சட்னி ஆகியவற்றைத்தான் மக்கள் வழக்கமாகச் செய்வார்கள். ஆனால், தற்போது புதிதாக, வித்தியாசமாக உருளைக்கிழங்கை சட்னி செய்வைத்து குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய் தூள், தண்ணீர், உப்பு, தக்காளி, பூண்டு, சிவப்பு மிளகாய், சமையல் எண்ணெய், எள்ளு, கடுகு, கறிவேப்பிலை
பெருங்காயத்தூள்

செய்முறை :
முதலில், வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி அதனுடன், பூண்டு, சிவப்பு மிளகாய் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்
இதையடுத்து கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள கலவை மற்றும் மிளகாய் தூள் போட்டு வதக்கி அதில் உருளைக் கிழங்கு, உப்பை போட்டு வதக்கவும்.
அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கடாயை மூடிவைத்து வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன் கீழே இறக்கி வைக்கவும். மேலும், மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி எள்ளு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து அதனை இறக்கி வைத்துள்ள உருளைக் கிழங்கு கலவையில் கொட்டி கிளறினால் சூடான சுவையான உருளைக்கிழங்கு சட்னி ரெடி.
English Summary
how to make potato chutny