பத்து நிமிடத்தில் பக்காவான வெரைட்டி ரைஸ்.!
how to make onion rice
வீட்டில் காய்கறிகள் இல்லாத நேரத்தில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு சுவையான மதிய உணவு என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு உதவும். வெங்காயத்தை வைத்து மட்டும் செய்யக்கூடிய ஒரு பதிவை இஞ்சுக்கு காண்போம்.
தேவையான பொருட்கள்:-
பாஸ்மதி அரிசி, எண்ணெய், கடலைப்பருப்பு, கடுகு, சீரகம், வேர்க்கடலை, முழு பூண்டு, வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், தண்ணீர், கறிவேப்பிலை, புளி தண்ணீர், கொத்தமல்லி இலை

செய்முறை:-
முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு, சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து அதனுடன் உறித்த முழு பூண்டு பற்களை சேர்த்து வதக்கவேண்டும்.
இதையடுத்து ஒரு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், பெருங்காய பொடி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து கறிவேப்பிலை மற்றும் புளி தண்ணீர் சேர்த்து மூடி வேகவிட வேண்டும்.
இதில் சமைத்த அரிசியை அதில் போட்டு உப்பு கலந்து நன்கு கிளறி அதன் மேல் கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்க வேண்டும்.