புரட்டாசி மாத ஸ்பெஷல் - சுவையான மிளகோரை சாதம்.!
how to make milakorai satham
புரட்டாசி மாத ஸ்பெஷல் - சுவையான மிளகோரை சாதம்.!
தமிழ் மாதங்களில் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் கோவில்களில் சில வகையான பிரசாதங்கள் கிடைக்கும். அந்த வகையில் பெருமாள்கோயில்களில் புரட்டாசி மாதத்தில் மிளகோரை சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அப்படி அந்த மிளகோரை சாதம் செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
மிளகு, சீரகம்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
வடித்து ஆறவைத்த பச்சரிசி சாதம்
நெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலை பருப்பு
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
முந்திரி பருப்பு
பெருங்காயத்தூள்

செயமுறை:-
வடித்து ஆறவைத்த சாதம், மிளகுப்பொடி ஆகிய இரண்டையும் தனித்தனியாக தயார் செய்து வைத்துவிடவேண்டும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, சீரகம், காய்ந்த் மிளகாய், கறிவேப்பிலை உள்ளிட்ட அனைத்தும் போட்டு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் முந்திரி பருப்புகளை சேர்த்து பொன்னிறமானவுடன், அடுப்பை அணைத்துவிட்டு, உடனடியாக அரைத்து வைத்துள்ள மிளகுத்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
இதில், வடித்து ஆறவைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறவேண்டும். அவ்வளவுதான் சுவையான மிளகோரை சாதம் தயார்.
English Summary
how to make milakorai satham