மைசூர் பருப்பு கறியா? இது என்ன புதுசா இருக்கு?
how to make maisoore paruppu kari
மைசூர் பருப்பு கறியா? இது என்ன புதுசா இருக்கு?
பருப்பை வைத்து சாம்பார் தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் முதல் முறையாக மைசூறில் பிரபலமான மைசூர் பருப்பு கறி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
மைசூர் பருப்பு, எண்ணெய், சீரகம், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், ஆம்சுர் பவுடர், சுடு தண்ணீர், கரம் மசாலா தூள், நெய், கொத்தமல்லி இலை, கஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு

செய்முறை:-
முதலில், மைசூர் பருப்பை நன்கு கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதையடுத்து பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு, ஆம்சுர் பவுடர் உள்ளிட்டவை சேர்த்து கலந்து விடவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் எண்ணெய் பிரிந்ததும் ஊறவைத்த மைசூர் பருப்பை சேர்த்து கலந்து சுடுதண்ணீர் சேர்த்து கடாயை மூடி முப்பது நிமிடம் வேகவிடவும்.
வெந்த பிறகு கரம் மசாலா தூள், நெய், நறுக்கிய கொத்தமல்லி இலை உள்ளிட்டவை சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மைசூர் பருப்பு கறி தயார்.
English Summary
how to make maisoore paruppu kari