கொள்ளு வடை எப்படி செய்வது? இதோ உங்களுக்காக.!
how to make kollu vada
கொள்ளு வடை எப்படி செய்வது? இதோ உங்களுக்காக.!
தானிய வகைகளில் ஒன்று கொள்ளு. இது உடல் எடையைக் குறைக்க பயன்படுகிறது. உடலுக்கு மிகவும் சத்துகளைத் தரக்கூடிய இந்த கொள்ளுவில், ரசம், சுண்டல் உள்ளிட்டவை தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், முதல் முறையாக வடை செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
கொள்ளு, துவரம் பருப்பு, சோம்பு, பூண்டு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, எண்ணெய்.

செய்முறை:-
முதலில், துவரம் பருப்பு மற்றும் கொள்ளை ஐந்து மணி நேரம் ஊற வைத்து எடுத்து அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும். பின்னர் வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உள்ளிட்டவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்,
ஊறிய துவரம் பருப்பை அரைத்து எடுத்து கொள்ளவும். இந்த மாவில், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சோம்பு உள்ளிட்டவைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இதையடுத்து அடுப்பில் ஒரு வாணலை வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக எடுத்து உருண்டையாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சத்தான சுவையான கொள்ளு வடை தயார்.