பாலக்காடு கீரை மொளகுடல் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்.!
how to make keerai mlakudal
கீரை மொளகுடல் பாலக்காடு சைவ சமையலில் இருந்து பிரபலமான உணவாகும். மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட பாலக்காடு கீரை குழம்பு எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
கீரை
தண்ணீர்
கல் உப்பு
மஞ்சள் தூள்
உளுத்தம் பருப்பு
சிவப்பு மிளகாய்
தேங்காய்
சீரகம்
துவரம் பருப்பு
தேங்காய் எண்ணெய்
கடுகு

செய்முறை:-
ஒரு கடாயில் நறுக்கிய கீரையைச் சேர்க்கவும் தேவையான அளவு தண்ணீர், கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் ஒரு தனி கடாயில், உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு வறுத்து, மிக்ஸியில் போட்டு தேங்காய், சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
இதையடுத்து ஒரு குக்கரில் துவரம் பருப்பை தண்ணீருடன் தனியாக மூன்று அல்லது நான்கு விசில் வரை சமைக்கவும். இந்த பருப்பு மற்றும் அரைத்து வைத்திருக்கும் விழுதை கீரையுடன் சேர்த்து, நன்றாக கலந்து கொதிக்க விடவும்.
இதில் தேங்காய் எண்ணெய், கடுகு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து தாளித்து ஊற்றவும். அவ்வளவுதான் சுவையான எளிமையான கீரை மொலாகுடல் தயார்.
English Summary
how to make keerai mlakudal