புதிய சுவையில் கோதுமை ரவா இட்லி - எப்படி செய்வது?
how to make gothumai rava idly
இதுவரைக்கும் நாம் அனைவரும் அரிசி மாவு இட்லி, ரவா இட்லி, கம்பு இட்லி உள்ளிட்டவற்றை தான் சாப்பிட்டிருப்போம். தற்போது புது விதமாக கோதுமை ரவா இட்லி செய்வது குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்:-
கோதுமை ரவா
உப்பு
நெய்
தயிர்
எண்ணெய்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
கடுகு
சீரகம்
இஞ்சி
பச்சை மிளகாய்
பெருங்காய தூள்
கறிவேப்பிலை

செய்முறை
ஒரு கடாயில் நெய் சேர்த்து, ரவையை வறுத்துக்கொள்ள வேண்டும்.
அது ஆறியவுடன், உப்பு, தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து ஊறவைக்கவேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து தாளித்தவுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காய தூள் சேர்த்து கலந்து விடவேண்டும். இதனை ஊறவைத்த ரவையுடன் சேர்த்து கலந்து விடவேண்டும்.
இதையடுத்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி, ரவை கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்தால் சுவையான கோதுமை ரவா இட்லி தயார்.
English Summary
how to make gothumai rava idly