நெல்லிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


நெல்லிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி?

தினமும் என்ன குழம்பு வைப்பது என்று புரியாமல் குழப்பத்தில் உள்ளீர்களா? நெல்லிக்காய் மட்டும் இருந்தால் போதும். சுவையான மோர் குழம்பு ரெசிபியை செய்யலாம். சிலருக்கு நெல்லிக்காயை சாப்பிடுவதற்கே பிடிக்காது. அப்படி உள்ளவர்கள் கூட இந்த குழம்பை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த நெல்லிக்காய் மோர்குழம்பை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:-

வேகவைத்த நெல்லிக்காய், துருவிய தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், புளிக்காத கெட்டி தயிர், மஞ்சள் பொடி, அரிசி, துவரம் பருப்பு, இஞ்சி, உப்பு , தேங்காய் எண்ணெய், பெருங்காயம், கடுகு, ஜீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை 

செய்முறை:-

முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். இந்த இடைப்பட்ட நேரத்தில், நெல்லிக்காயை வேக வைத்து விதை நீக்கி தயாராக வைத்துக் கொள்ளவும். 

இதையடுத்து ஒரு மிக்ஸர் ஜாரில் ஊறவைத்த அரிசி பருப்பு, துருவிய தேங்காய், இஞ்சி, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து அதனுடன் உப்பு, மஞ்சள் பொடி மற்றும் தயிர் சேர்த்து அரைக்கவும்.

இவை அனைத்தும் நன்கு அரைப்பட்டவுடன், எடுத்து வைத்துள்ள நெல்லிக்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனை ஒரு கடாயில் மாற்றி அடுப்பில் வைத்து லேசாக கொதி வர தொடங்கியவுடன் அடுப்பை அணைக்கவும்.

அதன் பின்னர் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து தாளித்து மோர்குழம்பில் சேர்த்து ஒரு முறை கிளறி விட்டால் சூடான சுவையான நெல்லிக்காய் மோர்க்குழம்பு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make Gooseberry curd kuzhambu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->