சாதத்திற்கு பொரியல் செய்து போர் அடிக்கிறதா? அப்போ இந்த பொடியை ட்ரை பண்ணி பாருங்க.!
how to make ellu podi
சாதத்திற்கு தினமும் ஏதாவது ஒரு பொரியல் செய்வது போர் அடிக்கும். அதனால், எள்ளை வைத்து சுவையான ஒரு போடி செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
கருப்பு எள்
கருப்பு உருந்து
வெள்ளை உளுந்து
வர மிளகாய்
பூண்டு
புளி
கறிவேப்பிலை
கல்லுப்பு
செய்முறை:-
எள், கருப்பு உளுந்து, வெள்ளை உளுந்து, வர மிளகாய் உள்ளிட்டவற்றை தனியாக வறுத்து ஆறவைக்க வேண்டும். பின்னர் பூண்டு, புளி, கறிவேப்பிலையை, கல்லுப்பு உள்ளிட்டவற்றையும் தனியாக வதக்க வேண்டும்.
அனைத்தையும் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்யவேண்டும். இதில் எள்ளை மட்டும் கடைசியாக சேர்த்து அரைக்க வேண்டும்.
எள்ளில் இருந்து எண்ணெய் வெளியேறும் என்பதால், அதனை ஆரம்பத்திலே சேர்த்தால் சரியான பொடி பதம் கிடைக்காது. நல்ல பொடி பதம் வேண்டுமென்றால், எள்ளை கடைசியாக சேர்த்து சிறிது நேரம் மிக்ஸியை ஓட்டி எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவை நிறைந்த எள்ளுப்பொடி தயார்.