சுவையான கேரட் பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி?
how to make carrot beens poriyal
தினமும் ஏதாவது ஒரு காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பல ஆய்வுகள் கூறுகிறது. இதனால், மக்கள் தினமும் ஏதாவது ஒரு காயை பொரியல் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில், கேரட் பீன்ஸ் சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
கேரட், பீன்ஸ், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலை பருப்பு, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், தேங்காய், பெருங்காயம், தேங்காய் எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை, மல்லி இலை

செய்முறை:-
கேரட் மற்றும் பீன்ஸை குட்டி குட்டியாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயை நன்றாக சூடாக்கி, தேங்காய் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விட வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து நன்றாக பொரிய விட வேண்டும்.
பின்னர், நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதில் கால் ஸ்பூன் பெருங்காயத்தை சேர்த்து கலந்து விட வேண்டும்.
இதையடுத்து, கேரட் மற்றும் பீன்ஸை சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விட வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
இதனை பீன்ஸ் காரட் உடன் சேர்த்து கலந்து வேக விட வேண்டும். கடைசியாக அதில் பச்சை கறிவேப்பிலை மற்றும் மல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான கேரட் பீன்ஸ் பொரியல் தயார்.
English Summary
how to make carrot beens poriyal