பத்தே நிமிடத்தில் பக்காவான அவல் சுண்டல் - எப்படி செய்வது?
how to make aval sundal
பத்தே நிமிடத்தில் பக்காவான அவல் சுண்டல் - எப்படி செய்வது?
நாம் இதுவரைக்கும் பலவகையான சுண்டல் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், புதுவிதமான சுவையில் அவலை வைத்து சுண்டல் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சை நிலக்கடலை
வெள்ளை அவல்
வெங்காயம்
பச்சை மிளகாய்
பூண்டு
இஞ்சி
சிவப்பு மிளகாய்
கருவேப்பிலை
கொத்தமல்லித் தழை
கடுகு
மஞ்சள் தூள்
எலுமிச்சை சாறு
உப்பு
எண்ணெய்

செய்முறை
முதலில் அவலை நன்றாகக் கழுவி சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தழை உள்ளிட்டவற்றை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காய்ந்த மிளகாய், கடுகு, கருவேப்பிலை போட்டு, பச்சை வேர்க்கடலையைப் போட்டு வதக்க வேண்டும். அதில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து போட்டு வதக்க வேண்டும்.
வேர்க்கடலை நன்றாக வெந்த பின்பு ஊற வைத்த அவல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். அவல் வெந்து உதிரி உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தலை மற்றும் எலுமிச்சை பல சாறு பிழிந்து இறக்கினால் சுவையான அவல் சுண்டல் தயார்.