சுவையான காய்கறி ஆம்லெட் செய்வது எப்படி?
how to make
முட்டையில் காய்கறி சேர்த்து ஆம்லெட் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம். அதற்கு தேவையான பொருட்கள் குறித்து காண்போம்.
கேரட் வெங்காயம்
தண்டுக்கீரை
கார்ன் ஃப்ளோர்
உப்பு
மிளகுத்தூள்
சாட் மசாலா
முட்டை

செய்முறை:-
உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை நன்றாக துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பெரிய வெங்காயத்தை நீள நிளமாக கட் செய்தும், தண்டுக் கீரையை தண்டோடும் நறுக்கிக் கொள்ளவேண்டும்.
இதனை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி கார்ன் ஃப்ளோர், உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலா அனைத்தும் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு தவாவில் அடுப்பில் வைத்து சூடாக்கி கலக்கி வைத்த முட்டைக் கலவையை வட்ட வடிவ ஆம்லேட்களாக பரப்பி, வேக வைத்து எடுக்க வேண்டும்.