சத்தான பூண்டு மிளகு சாதம்..! ரெசிபி இதோ..! - Seithipunal
Seithipunal


உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய சத்தான பூண்டு மிளகு சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

சாதம் - 1 கப்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுந்து – 1/2 டீஸ்பூன்

கடலை பருப்பு - 1/2 டீ ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

வெங்காயம் -1

 பூண்டு - 8 

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு 

நெய், உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

முதலில் வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு அடுப்பில் கடாயை வைத்து நெய்விட்டு உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு வெங்காயம் சிவந்ததும், நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு சாதம் சேர்த்து நன்றாக கிளறி, மிளகுத்தூள் சேர்க்கவும். இதையடுத்து கொத்தமல்லித்தழை சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான பூண்டு மிளகு சாதம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy Poondu milagu sadam recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->