இரும்பு சத்துக்கள் அதிகம் நிறைந்த பேரீச்சம் பழம்.. இப்படி செய்து கொடுங்கள்..!
dates Payasam Recipe
பேரீச்சம் பழத்தில் உடலுக்கு தேவையான ஊட்டசத்துகள் உள்ளன. பேரீச்சம் பழத்தில் சுவையான பாயாசம் எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 20
பால் - 2½ கப்
முந்திரி மற்றும் பாதாம் - 10
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை :
பேரீச்சம் பழத்தை கழுவி பாலில் ஊறவைத்து அரைத்து கொள்ளுங்கள். அடுப்பில் கனமான பாத்திரத்தில் 2 கப் பாலை சுண்டும் அளவிற்கு காய்ச்சிக் கொள்ளவும்.அதில் பேரீச்சம்பழம் கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
கொதித்ததும் அதனுடன் 1 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பாதாம் அல்லது தேங்காய் சீவல்களை வறுத்து சேர்த்து கொள்ளுங்கள். குங்குமப்பூ சேர்த்து இறக்கி கொள்ளுங்கள்.