ருசியான ''சிலோன் முட்டை குருமா'' ஒரு முறை இப்படி செய்து பாருங்க..!
Ceylon Egg Kuruma recipe in tamil
தினமும் முட்டை சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் அபாயம் குறையும். ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்கும் உதவுகிறது. கண்புரை, கண் நோய் வராமல் தடுக்க முட்டையில் உள்ள கோலின் சத்து உதவுகிறது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இந்நிலையில் சிலோன் முட்டை குருமா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
முட்டை
சோம்பு தூள்
கல்பாசி, ஏலக்காய்
அண்ணாச்சி பூ, மராத்தி மொக்கு
பெரிய வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
உப்பு
தேங்காய் துருவல்
எண்ணெய்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து அதனுடன் கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
பின்னர் முட்டை கலவையை சிறிய கிண்ணங்களில் எண்ணெய் தடவி அதில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சோம்பு தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கல்பாசி, ஏலக்காய், அண்ணாச்சி பூ, மராத்தி மொக்கு போன்றவற்றை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாக கொதித்ததும் வேக வைத்துள்ள முட்டையை குழம்பில் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான சிலோன் முட்டை குருமா தயார்.
English Summary
Ceylon Egg Kuruma recipe in tamil