எலுமிச்சை பழத்தை வைத்து கரப்பான் பூச்சிகளை ஈஸியாக அழிக்கலாம் ? இத பண்ணுங்க போதும்! - Seithipunal
Seithipunal


சமையல் வேலைகளை எளிமையாகவும் சுலபமாகவும் செய்ய சில பயனுள்ள குறிப்புகளை இங்கே வழங்கியுள்ளோம். தினசரி சமையல் பணிகளில் இவை மிகுந்த உதவியாக இருக்கும்.

1. சர்க்கரையில் ஈரப்பதம் இருந்தால்:
சீனி டப்பாவில் ஈரப்பதம் இருந்தால், அதை சரி செய்ய கொட்டாங்குச்சியை டப்பாவுக்குள் வையுங்கள். கொட்டாங்குச்சி ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் சீனி சரியாக இருக்கும்.

2. பூண்டின் தோலை சுலபமாக உரிக்க:
பூண்டின் தோலை உரிக்க சிரமமா? உலை வைக்கும் போது பூண்டை மூடியில் பரப்பி, ஐந்து நிமிடம் வைத்திருங்கள். பின்னர் தோலை எளிதில் உரிக்கலாம்.

3. தேங்காய் கெட்டுப் போகாமல் பாதுகாக்க:
தேங்காய் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் வைத்திருக்க எலுமிச்சை சாறு தடவி, பாலிதீன் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வையுங்கள். இவ்வாறு செய்தால், தேங்காய் ஒரு வாரம் நல்ல நிலையில் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்க விரும்பாவிட்டால் உப்பு தண்ணீரில் போட்டு வையுங்கள்; ஆனால் தினமும் தண்ணீரை மாற்ற வேண்டும்.

4. கிச்சன் சிங்க் சுத்தம் செய்ய:
தண்ணீரில் எலுமிச்சை சாறு, டிஷ் வாஷ் லிக்விட், சோடா உப்பு சேர்த்து கொதிக்க வையுங்கள். பின்னர் இதனை ஸ்ப்ரே பாட்டிலில் வைப்பதன் மூலம் சிங்கில் தெளித்தால் எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சி தொல்லைகள் குறையும்.

 5. மிக்ஸி ஜார் சுத்தம் செய்ய:
குக்கர் கேஸ்கட், விசில் மற்றும் மிக்ஸி ஜாரை சுத்தம் செய்ய சூடான நீரில் சிறிதளவு வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கழுவுங்கள். இது உள்ளே மஞ்சள் கலர் நீங்க சுத்தம் செய்ய உதவும்.

6. குக்கர் கருப்பாக இருந்தால் சுத்தம் செய்ய:
உருளைக்கிழங்கை குக்கரில் அவிக்கும் போது, அதனுடன் உப்பும் எலுமிச்சைச் சாறும் சேர்த்துக் கொள்ளுங்கள். குக்கர் உள்ளே கருப்பாக மாறினாலும் சுலபமாக சுத்தம் செய்யலாம்.

இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி, சமையல் பணிகளைச் செய்யும் போது நீங்களே நேரமும் உழைப்பையும் குறைக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Can you use lemon to kill cockroaches easily Just do it!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->