அடடே.. கத்தரிக்காய் சாப்பிடுவதால் இப்படியெல்லாம் உடலுக்கு நன்மை கிடைக்கிறதா?..!!
Benefits and Health Tips to Eat Brinjal 1 Sep 2021
நாம் நமது உணவில் பெரும்பாலும் கத்தரிக்காயை சாப்பிடுவோம். அந்த வகையில், கத்தரிக்காயில் இருக்கும் சத்துக்கள் குறித்து நாம் காண்போம். கத்தரிக்காயில் அதிகளவு இரும்பு சத்து உள்ளது. இரும்பு சத்து குறைபாடு இருக்கும் நபர்கள், கத்தரிக்காயை எடுத்து கொள்ளலாம்.
கத்தரிக்காய் சளி மற்றும் இருமல் பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும், உடல் பருமனை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கத்தரிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, இரும்பு சத்து, பாஸ்பிரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது.

கத்தரிக்காயை அவ்வப்போது உணவில் சேர்த்து கொண்டால் இதய தசைகளை நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாது. கத்தரிக்காய் கொழுப்பை கரைத்து, உடல் பருமனை குறைக்கிறது. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தோல் அலர்ஜி பிரச்சனை சரியாகும். சர்க்கரை நோயாளிகள் அதிகளவு சாப்பிடலாம்.
இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். உடலில் காயம் மற்றும் ஆபரேஷன் செய்துகொண்ட நபர்கள் கத்தரிக்காயை எடுத்துக்கொள்ள இயலாது. கத்தரிக்காயை கூட்டு மற்றும் பொரியல் போன்று சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கும்.
English Summary
Benefits and Health Tips to Eat Brinjal 1 Sep 2021