சரும அழகை மேம்படுத்தும் வாழைப்பழம்..!! - Seithipunal
Seithipunal


வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான சத்துகள் அனைத்தும் கிடைக்கும். ஆரோக்கியதற்க்கு மட்டுமல்ல அழகிற்கும் வாழைபழம் நல்ல பலனை தருகிறது. அதனை எப்படி செய்வது என பார்போம்.

சருமத்திற்கு:

வாழைப்பழத்தை சருமத்தில்  அதனை நாம் முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் நமது சருமத்தில் உள்ள அழுக்குகள் நீக்கும்.

ஒரு கப் வாழைப்பழத்துடன் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் அதனை முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி வர வேண்டும். இதை வாரம் இருமுறை செய்து வருவதன் சருமத்திருகு நல்ல பலன் கிடைக்கும்.

வாழைப்பழத்துடன் தேன், தக்காளி கலந்தும் சருமத்தில் பயன்படுத்தலாம். மேலும் வாழைப்பழத்துடன் பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பிற பழங்களையும் சேர்த்து பயன்படுத்தலாம்.

ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு சிறந்த முகவராக செயல்படுகிறது. வாழைப்பழத்துடன், ஆரஞ்சு சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பிரகாசமடையும்.

ஒரு டீஸ்பூன் பால், மற்றும் இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். 

நன்றாக காய்ந்ததும் காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். இப்படி தொடந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கும்

கூந்தலுக்கு:

 வாழைபழத்துடன் தேக்கரண்டி தூய கிளிசரின் மற்றும் பாதம் எண்ணெய்யை சேர்த்து  கூந்தலுக்கு தடவி சிறிது நேரம் கழித்து ஷாம்பூ போட்டு கழுவினால் கூந்தல் பலம் பெறும்.

வாழைபழத்துடன் தயிர் கலந்து கூந்தலுக்கு தடவி வர கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Banana For Beauty Tips


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->