சத்தான அவல் பர்ஃபி.! இன்றே செய்து பாருங்கள்.! - Seithipunal
Seithipunal


தேவைப்படும் பொருட்கள் :

கெட்டி வெள்ளை அவல் - 1 கப்
முந்திரி - சிறிதளவு
நெய் - 4 ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
நாட்டுச் சர்க்கரை - ½ கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - ½ கப்

செய்யும் முறை :

கெட்டி அவலை தண்ணீரில் நான்கு முறை அலசி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

தண்ணீர் நன்கு வடிந்தபின் வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு அவலைப் போட்டு நிறம் மாறாமல் வருது எடுக்க வேண்டும். ஓரளவு வறுத்த பிறகு அத்துடன் நாட்டுச் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேங்காயத் துருவல், ஏலக்காய் பொடியையும் சேர்த்து வதக்க வேண்டும்.

இந்தக் கலவை நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து வாணலியில் ஒட்டாமல் நெய் பிரிந்து சுருண்டு வரும்பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும்.

ஒரு ட்ரேயில் நெய் தடவி அதன் மேல் இந்த அவல் கலவையைக் கொட்டி சமன்படுத்தி ஆறவைக்க வேண்டும்.

முந்திரி அல்லது பாதாமை இடைவெளி விட்டு அந்த பர்ஃபி கலவையின் மேல் செருகி வைக்க வேண்டும்.

கலவை வெது வெதுப்பாக இருக்கும் பொழுது டைமண்ட் அல்லது சதுர வடிவில் அறுத்து எடுத்தால் சுவையான நாட்டுச் சர்க்கரை அவல் பர்ஃபி தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aval barffi preparation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->