கால் ஆணி,பாத வலி ,குதிகால் ,பாத வெடிப்பு பிரச்சனையா..?வீட்டிலேயே சூப்பர் ஹிட் டிப்ஸ்! - Seithipunal
Seithipunal


குதிகால் மிருதுவாக்க
ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளுடன், ஒன்றரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்துகொள்ள வேண்டும்.
அந்த கலவையை, உங்கள் குதிகாலில் தூங்க செல்லும்முன் தேய்த்துகொள்ள வேண்டும்.
சாக்ஸ் அல்லது ப்ளாஸ்டிக் பேக்கை இருகால்களிலும் அணிந்துகொள்ள வேண்டும்.
இது உங்கள் வெடிப்புற்ற குதிகாலை மிருதுவாக வைத்துகொள்வதோடு மென்மையாகவும் மாற்றுகிறது.
பாத வலி குறைய
இரவில் படுக்கப்போவதற்கு முன்பு சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு போட்டுப் பாதங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.


பிறகு, பழைய டூத்பிரஷால் பாதத்தை நன்றாக‌ சுத்தம்செய்து, ஈரம் போகத் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.
பாத வலி குறைந்து, தூக்கம் தழுவும்.
கால் ஆணி மறைய
ஒரு டீஸ்பூன் எருக்க இலைச் சாறுடன் 5 சொட்டு டீ ட்ரீ ஆயில் கலந்து ஆணி உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
பாத வெடிப்பு குணமாக
கிளிசரின் 50 மி.லி., கடுகு எண்ணெய் 10 மி.லி., எலுமிச்சை பழச்சாறு 20 சொட்டுக்கள் இவைகளை சேர்த்துக் கலக்கவும். இதை இரு கால்களிலும் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவிவிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you having problems ingrown toenails foot pain heels cracked feet Super hit tips at home


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->