ஆசையாக பிரியாணி ஆர்டர் செய்து காத்திருந்த இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!! ஆன்லைனில் வந்த ஆபத்து..!!  - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தைச் சேர்ந்த ரஹ்மத் நகரை சேர்ந்த இளைஞர் Zomatoவில் பிரியாணி ஆர்டர் செய்தார். ஆனால்  தொழில்நுட்ப கோளாறினால் ஏற்பட்ட தவறுதலால் சாம்பார் சாதம் ஆர்டர் ஆகியுள்ளது. இதனால் அந்த வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள ஆன்லைனில் எண்ணை தேடியுள்ளார்.

அதில் வாடிக்கையாளரின் சேவை எண் என்று எதுவும் இல்லை, வாடிக்கையாளர் சேவை எண் என்று குறிப்பிட்டு இருந்த போலி எண்ணிற்கு எனது தொடர்பு கொண்டு அவருடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த ஐடி ஊழியரின் போனுக்கு QR Code ஒன்றை தொலைபேசியில் பேசியவர் அனுப்பியுள்ளார்.

இதன் மூலம் ஆர்டர் செய்த பிரியாணிக்கான பணத்தை திருப்பி எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அதன்படி வரும் அந்த QR code பயன்படுத்தி scan செய்துள்ளார். இதன் மூலம் அவர் வங்கி கணக்கில் வைத்திருந்த ரூபாய் 50,000 எடுக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி அவரது செல்போனுக்கு வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதை தொடர்ந்து, அந்த ஐடி ஊழியர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இது குறித்து பேசிய போலீசார், தற்போது இது போன்ற ஆன்லைனில் பணம் சுருட்டுவது அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக ஆன்லைனில் வாங்கும் இணையவாசிகள் அவர்களுடைய வங்கி விவரங்களை எக்காரணத்தை கொண்டும் மூன்றாவது நபருக்கு தெரியப்படுத்த கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் வாடிக்கையாளர்களின் சேவை மைய தொடர்பு என்று என்ற எண் எதுவும் இல்லை எனவே வாடிக்கையாளர்கள் இதுகுறித்து, இணையத்தில் தேட வேண்டாம் என்று நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

zomato fake customer care number


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->