ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இப்படி செய்திருக்க கூடாது -  நடிகர் பவன் கல்யாண் வேதனை - Seithipunal
Seithipunal


ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ரஜினிகாந்தை கேலி செய்தது குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். 

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ''பொய் வழக்குகளில் சந்திரபாபு நாயுடுவை சிக்க வைப்பதை எதிர்க்கும் மக்கள் கவலைகளை வெளிப்படையாக தெரிவிக்க மாட்டார்கள். 

திரைப்படத்துறையானது வெவ்வேறு குழுக்களை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் சொந்த அரசியல் சார்புகளை கொண்டு எச்சரிக்கையாக உள்ளது. 

முழு நேர அரசியலில் ஈடுபடும் என்னை போன்ற ஒருவர் என் போக்கில் ஏராளமான கருத்துக்களை தெரிவிக்கலாம். இருப்பினும் எந்த ஒரு அரசியல் கட்சியையும் திரையுலகில் உள்ளவர்கள் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். 

ஏனென்றால் அவர்களுக்கு அன்றாடம் போராட வேண்டிய பிரச்சனைகள் உள்ளன. மறைந்த ஆந்திரா சூப்பர் ஸ்டார் மற்றும் பிரபல குணச்சித்திர நடிகர் எம். பிரபாகரன் தீவிர ஆதரவாளராக இருந்தவர்கள். 

கடந்த காலத்தில் இருந்தே தெலுங்கு தேச கட்சிக்கு சொந்த அடித்தளம் இருந்தது. சந்திரபாபு நாயுடு செய்த நல்ல பணியை ஆதரித்ததற்காக ரஜினிகாந்த் போன்ற ஒரு நட்சத்திரத்தை ஓ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கேலி செய்திருக்கக் கூடாது. இந்த செயல் ஒரு துரதிஷ்டவசமானது'' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

YSR congress party shouldnt have mocked Rajinikanth Actor Pawan Kalyan 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->