7 வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து உடைத்த எம்எல்ஏ! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ! - Seithipunal
Seithipunal


தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டியின் அதிர்ச்சி காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 13ம் தேதி நடந்து முடிந்தது.

வாக்குப்பதிவும்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக பல்நாடு மாவட்டம் மாச்சர்லா தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு எந்திரத்தை உடைக்கும் காணொளி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த காணொளியில், ராமகிருஷ்ண ரெட்டி வாக்குப்பதிவு செய்ய முற்பட்டபோது, அதிகாரிகள் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். 

அப்போது ஒரு வார்த்தை கூட பேசாத ராமகிருஷ்ண ரெட்டி, வாக்குப்பதிவு செய்யும் இயந்திரத்தை எடுத்து தரையில் பலமாக வீசுகிறார். 

அந்த எந்திரம் சிதறி உடைந்து கிடப்பதும், இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏவின் உதவியாளர் ஒருவரின் அவர் கன்னத்தில் அறைவதும் அந்த காணொளியில் பதிவாகி உள்ளது.

அப்போது அதிகாரிகள் எம்எல்ஏ-வை தடுத்து நிறுத்துவதற்கு முன்பாகவே அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

இந்த காணொளி வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே மாச்சர்லா சட்டமன்றத் தொகுதியில் உள்ள 7 வாக்குச்சாவடி மைய வாக்குப்பதிவு எந்திரங்களைகளை பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி சேதப்படுத்துவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும் என்றும் சொல்லப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

YSR Congress MLA Ramakrishna Reddy vandalizing EVM machine


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->