ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ‘சோஷியல் மீடியா’ தடைக்கு மத்திய அரசு ஆலோசனை ...!
Following Australia central government considering banning social media India too
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் அன்றாட வாழ்விலும் சமூக வலைதளங்கள் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மாறிவிட்டன. ஆனால், இந்த அதிகப்படியான பயன்பாடு குறிப்பாக சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

நீண்ட நேரம் மொபைல் திரையில் மூழ்கிக் கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை, படிப்பில் பின்னடைவு போன்ற பல்வேறு சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து, அந்தச் சட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன.
இந்த நிலையில், இந்தியாவிலும் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கையை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதள பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
English Summary
Following Australia central government considering banning social media India too