லீக் சுற்றிலேயே வெளியேறிய ஆஸ்திரேலியா! உங்களால் என் மானமே போச்சு.. இந்திய நண்பர்கள் கிண்டல் செய்கிறார்கள்- ரிக்கி பாண்டிங் - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஐசிசியின் 10வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கியது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த கட்டமான சூப்பர் 8 சுற்றுக்கான அணிகள் தீர்மானிக்கப்படுகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், நான்கு பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுகின்றன.

இந்நிலையில், பி பிரிவில் இடம் பெற்றிருந்த பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணி லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. அதே பிரிவில் இருந்த இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளன. டி20 உலக கோப்பை வரலாற்றில் லீக் கட்டத்திலேயே ஆஸ்திரேலியா வெளியேறுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வி குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:“ஆஸ்திரேலியா அணிக்கு இது மிகவும் மோசமான உலக கோப்பையாக அமைந்துள்ளது. பல முக்கிய வீரர்கள் காயம் அடைந்ததால், இந்த முறை அணி முழு பலத்துடன் இல்லை என்பதை நான் முன்பே உணர்ந்தேன். இந்த தொடரில் இருந்து வெளியேறியதற்கு பிறகு, கடந்த சில நாட்களாக இந்திய நண்பர்களிடமிருந்து நிறைய கிண்டல் செய்திகளைக் கிடைத்து வருகிறது.”

மேலும் அவர் நகைச்சுவையாக,“பொதுவாக நான் தான் அவர்களுக்கு கிண்டல் மெசேஜ்கள் அனுப்புவேன். ஆனால் இப்போது அவர்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள். இந்த முறை பெரிய தொடரில் விளையாடும் ஆரா கொண்ட அணியாக ஆஸ்திரேலியா இல்லை,”
என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் திடீர் வெளியேற்றம் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகளை நோக்கி மற்ற அணிகள் தயாராகி வரும் நிலையில், தொடரின் மீதிப்போட்டிகள் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Australia knocked out in the league round You have ruined my pride Indian friends are making fun of me Ricky Ponting


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->