சீனாவின் வசந்த விழா கொண்டாட்டம் விபரீதம்: பட்டாசு கடை தீ விபத்தில் 12 உயிர்கள் பலி ...! - Seithipunal
Seithipunal


சீனா முழுவதும் ‘வசந்த விழா’ எனப் போற்றப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வண்ணமயமாகவும் உற்சாகமாகவும் நடைபெற்று வருகின்றன.

சீன ஜோதிடக் கணிப்பின்படி, இந்த ஆண்டு ‘குதிரை ஆண்டு’ தொடக்கத்தைச் சுட்டிக்காட்டுவதால், மக்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது.

தீய சக்திகளை விரட்டவும், நல்வாழ்வு வரவேற்கவும் பட்டாசுகள் வெடிப்பது அங்குள்ள பாரம்பரிய மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.ஆனால் இந்த கொண்டாட்ட மகிழ்ச்சிக்கிடையே துயரச் செய்தி ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹூபேய் மாகாணத்தில் உள்ள ஜியாங்யாங் நகரில் செயல்பட்டு வந்த பட்டாசு விற்பனை கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து பெரும் பேரழிவாக மாறியது.

இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் சந்தோஷ தருணமே சில நொடிகளில் சோகமாக மாறிய இந்த வெடிவிபத்து, அப்பகுதி மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China Spring Festival celebration turns tragic 12 lives lost firecracker shop fire


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->