பெரம்பலூரில் துணிகர கொள்ளை...! ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து 80 பவுன் நகை, ரொக்கம் திருடிய கொள்ளையர்கள்...! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே வீட்டில் யாரும் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 80 பவுன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் உள்ள குரும்பலூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (60).

இவர் திருச்சி மாவட்டம் புதூர்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.ஆரோக்கியராஜ் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இதையடுத்து ராஜலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். மகன் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், ராஜலட்சுமியின் மகள் வழிப் பேத்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 10-ம் தேதி ராஜலட்சுமி சென்னைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.அவர் வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், குரும்பலூர் பாளையத்தில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அறைகளில் இருந்த பொருட்களை சிதறடித்து, பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர்.

வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதையும், பீரோ திறந்து கிடப்பதையும் பார்த்த உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து ராஜலட்சுமிக்கும், காவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.கொள்ளை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சென்னையில் இருந்த ராஜலட்சுமி பதற்றத்துடன் பெரம்பலூருக்கு புறப்பட்டு வந்தார்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 80 பவுன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மகனின் திருமணத்துக்காக ராஜலட்சுமி நீண்ட காலமாக சேமித்து வைத்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜலட்சுமி நேரில் வந்து வீட்டில் இருந்த பொருட்களை சரிபார்த்த பின்னரே கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தின் முழுமையான மதிப்பு தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.

குரும்பலூர் பாளையம் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில், ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் கொள்ளையர்களின் நடமாட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

daring robbery Perambalur Robbers broke lock retired headmaster house and stole 80 pounds jewelry and cash


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->